Wednesday, September 1, 2010

ஆதிராவின் அம்மாவை ஏன்தான் நான் காதலித்தேனோ?


விடைத்த குறியை மறைத்து மெல்ல
உன் அருகாமை வர
கருமேகம் திரண்டு மழை வலுக்கிறது

இலுப்பையும் வேம்பும் சடசடக்க
சடுதியில் தீப்பற்றிய சூழலில்
பீறிட்டெழுகிறது காமக் கடும்புனல்

நேற்றைப்போலவே இன்றும் கைக்கூடவேண்டி
சலனப்படும் மனதில்
ஆயிரமாயிரம் மந்திகள் ஓடித்திரிகின்றன

சூழலைப் புறந்தள்ளி
இன்று வேண்டாம் என்கிறாய்
பெருஞ் சீற்றத்தோடு வலுக்கிறது மழை

நிச்சயம் போகமாட்டாய் என்றுதான்
எண்ணியிருந்தேன்
நீ புறப்படும் வரை

அதன் பிறகான சம்பவங்கள்
அனைத்தும் வழக்கமாக நடப்பவைதான்

ஏக்கத்தின் சுடர்தாங்கிய என் இரவுகளில்
இன்னும் ஒன்று கூடவேண்டுமா செல்லமே
(கண்டராதித்தனுக்கு)