
நிலவு மரணித்து விட
பகற்பொழுதின் நீட்சியை
இனிமேலும் தடுக்கவியலாது
எரிந்தவண்ணம் இயக்கம்
கொள்ளும் ஞாயிறு
எதையும் நிர்வாணமாக்கும்
பின்
யாரும் எதிர்பாரா வேளையில்
மேற்கிலிருந்து கூட சூரியோதயம்
நிகழக்கூடும்
ஓய்வும் உறக்கமும்
கூடி முயங்குதலின் காலவெளியும்
எதிர்பார்த்த கணங்களில்
இனிமேல் நிகழாது
தீர்மானித்து செயல்படுவது
திடீரென அற்றுவிடும்
இயக்கத்தின் பெருவெளியில்
எதையும் செய்ய
பழகித்தானாக வேண்டும்
இல்லையேல்
நடுவானில் கூட சூரியோதயம்
சாத்தியமாகலாம்
No comments:
Post a Comment