
இறுதி செய்யப்பட்ட
அன்பின் வார்த்தைகள்
அறிவிக்கின்றன
ஓர் நாசக்காரனின் வருகையை
அடையாளப்படுத்தியதோடு
முடிவடைவதில்லை
உங்கள் செயல்பாடு
தொடர் தாக்குதலை
மேற்கொள்ளும் எவரும்
எதன் பொருட்டும் சோர்ந்துவிடாதீர்கள்
கருணையோடு அளிக்கப்படும்
சிறு அவகாசம்
நாசக்காரனுக்கு அளித்துவிடக்கூடும்
புதிய உற்சாகத்தை
நாசக்காரனென
அழைக்கப்படும் ஓர் நபர்
அவசியம் அவ்வாறு
இருந்தாக வேண்டிய
எந்தக் கட்டாயமும் இல்லையெனும்
சிறு விளக்கத்தை மட்டும்
மனதில் கொள்ளும் நீங்கள்
பிறகு
எதுபற்றியும்
யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது.
நல்ல பதிவு
ReplyDeleteகருணையோடு அளிக்கப்படும்
ReplyDeleteசிறு அவகாசம்
நாசக்காரனுக்கு அளித்துவிடக்கூடும்
புதிய உற்சாகத்தை
----------
:))
அது அவர் தரம்.