Wednesday, September 1, 2010

ஆதிராவின் அம்மாவை ஏன்தான் நான் காதலித்தேனோ?


விடைத்த குறியை மறைத்து மெல்ல
உன் அருகாமை வர
கருமேகம் திரண்டு மழை வலுக்கிறது

இலுப்பையும் வேம்பும் சடசடக்க
சடுதியில் தீப்பற்றிய சூழலில்
பீறிட்டெழுகிறது காமக் கடும்புனல்

நேற்றைப்போலவே இன்றும் கைக்கூடவேண்டி
சலனப்படும் மனதில்
ஆயிரமாயிரம் மந்திகள் ஓடித்திரிகின்றன

சூழலைப் புறந்தள்ளி
இன்று வேண்டாம் என்கிறாய்
பெருஞ் சீற்றத்தோடு வலுக்கிறது மழை

நிச்சயம் போகமாட்டாய் என்றுதான்
எண்ணியிருந்தேன்
நீ புறப்படும் வரை

அதன் பிறகான சம்பவங்கள்
அனைத்தும் வழக்கமாக நடப்பவைதான்

ஏக்கத்தின் சுடர்தாங்கிய என் இரவுகளில்
இன்னும் ஒன்று கூடவேண்டுமா செல்லமே
(கண்டராதித்தனுக்கு)

4 comments:

  1. எல்லோர் வாழ்விலும் வரும் அனுபவம் தான் இது என்றாலும், உங்களால் மட்டுமே அதை கவிதையாக்க முடிந்திருக்கிறது...எனது புரிதல்களுடன் ஒத்துப் போகிறதா என நிச்சயப்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரம்பிக்கிறேன்... அது தான் உங்கள் வெற்றி போலும்...

    ReplyDelete
  2. ம். அட்டகாசம். (கண்டராதித்தன் தான் புரியவில்லை. முதல் முறை வருவதாலோ என்னவோ?

    ReplyDelete
  3. கவிதை குறித்த உங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே. இக்கவிதையை நண்பரும் கவிஞருமான கண்டராதித்தனுக்கு சமர்ப்பனம் செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. வெறும் மழையல்ல... இது!

    கடுங்கோடையில் பெருத்த இடியோசையுடன் உயிர்நனைக்கும் கோடைமழை!

    ஆகா!

    ReplyDelete