
ஒருபோதும் உணரமுடியாதபடி இருக்கும்
புணர்ச்சியின் கவிச்சை
நெடிய மூச்சுடன்
அங்குமிங்குமென அல்லலுறுகின்றது
ஒரு வௌவாலென
ஒவ்வொரு தொடுகையிலும்
உன்னில்
உயிர்பெரும் ஏகாந்தத்தில்
உருத்திரளும்
முகம்
யாருடையதாக இருக்குமென்ற சிந்தனையில்
அப்போதுதான் பூத்த
ஒரு மலர் உதிர ஆரம்பிக்கிறது
சற்றைக்கு முன்புதான்
தனது கடைசி சுரப்பையும்
நிறுத்திக்கொண்டு
தகிக்கும் வெண்மணலை பரப்பிச் சென்றது உன் நதி
ஏதாவதொரு
மரணத்திலிருந்துதான் தொடங்குகின்றன
பிரியத்தின்
அனேக உரையாடல்கள்
கடைசியில் நிகழ்ந்தேயாகவேண்டிய ஒன்றாக இருக்கிறது
மரணம்
அன்பின் காலபைரவன்
ReplyDeleteகவிதை அருமை
பூத்த மலர் உதிர் ஆரம்பிக்கிறது - ஒவ்வொரு தொடுகையிலும் உருத்திரளும் முகம் யாருடையதென்று தெரியாமலேயே
நல்ல கற்பனை
நல்வாழ்த்துக்ள்
நட்புடன் சீனா