
கவிதையெழுதுவது
குற்றமென
அறிவிக்கப்படுகிறது
திடீரென்று
அனைத்து மாநில எல்லைச் சாவடிகளும்
வருவோரையும் போவோரையும்
கவிஞர்கள் அல்ல என
உறுதி செய்து கொண்ட பிறகே
தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கின்றன
தபால் நிலையங்கள்
தந்தி அலுவலகங்கள்
தனியார் கூரியர் நிறுவனங்கள்
அரசு மற்றும் தனியார் தொலைபேசிகள்
கவிதைகளைப்
பரிமாற்றம் செய்ய
முற்றாக மறுத்துவிடுகின்றன
இந்த ஆண்டின்
எந்த இலக்கிய விழாக்களிலும்
கவிதைகள் கண்டுகொள்ளப்படாமல்
ஒதுக்கப்படுகின்றன
உரைநடை ரூபத்தில் கவிதைகள்
ஏதாவது
வெளிவருகிறதாவென்று கவனிக்க
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுவிட்டது
கவிஞர்களை ஒடுக்குவதற்கான
அவசரச்சட்டமும் தயார் நிலையில்
கவிதை மற்றும்
கவிஞர்கள் குறித்தான தகவல்களை
அந்தந்த அரசுகள் அரக்கத்தனமாக
அழித்தொழிக்கின்றன
இங்கிருந்தோ
அல்லது வெளிநாடுகளிலிருந்தோ வரும்
கவிஞர்களுக்கான ஆதரவுக் குரல்களின்
முனைகள் உடனுக்குடன் மழுங்கடிக்கப்படுகின்றன
எல்லாம் வழக்கம் போலவே
நடந்து முடிகிறது
கவிஞர்களைப் பொருட்படுத்த வேண்டிய
அவசியம் இங்கு
யாருக்குமே நேரவில்லை
அருமை .
ReplyDelete//கவிஞர்களைப் பொருட்படுத்த வேண்டிய
ReplyDeleteஅவசியம் இங்கு
யாருக்குமே நேரவில்லை//
unmaiyaana kavithai vadiththa ungkalukku vaalththukkal.
//இந்த ஆண்டின்
ReplyDeleteஎந்த இலக்கிய விழாக்களிலும்
கவிதைகள் கண்டுகொள்ளப்படாமல்
ஒதுக்கப்படுகின்றன//
உண்மையை அழகாக எழுதியுள்ளீர்கள்.. அருமை.. தங்களின் பாதி பதிவுகளை இன்று, முதல் முறை வந்தவுடனே படித்து விட்டேன் என்றே கூற வேண்டும். அத்தனையும் அருமை. இததனை நாட்கள் எப்படி என் கண்களில் படாமல் இருந்தது என்று தெரியவில்லை.
நீண்ட நேரமாக தங்கள் இல்லத்திலேயே தங்கி விட்டேன்.. மீண்டும் நாளை வருகிறேன்..
நிச்சயம் எல்லா இடத்திலும் கண்காணிக்கப்படும்.இப்படி பொருள் தருகின்ற கவிதை, மறைமுகத்துடன் எல்லாருக்கும் புறிந்தால்.
ReplyDeleteநன்றி தொழரே.