
சனிப்பிணம் துணைத்தேடி
வளமோட்டுப் பாறையேறி
கோட்டான் ஒலி கேட்கும்
வாசியம்மன் குறிசுவைக்க
ஐயனாரப்பனுக்கேனிந்த
அவசரம்
கள்ளக் கூடலுக்கு
காட்டேரி துணைபோக
தீவட்டி கொண்டு
சாரிபோகும் கன்னிமார்கள்
பச்சபுள்ளா குளம் தாண்டி
சரடென இழையும்
குறியொலி கேட்டு
கோணமலைப் பிள்ளையார்
குன்றேறிப் பார்ப்பார்
ஈசானத் திக்கில்
சிவனும் தயார் நிலையில்
கந்தவேல் முருகன்
கையாலாகாதவனா
திசையெங்கும் ஏதிரொலிக்கும்
குறிகளின் ஓலம்
பின்
திப்பக்காடு தாண்டி
சூரியப் பிரவேசம்
No comments:
Post a Comment