Monday, October 11, 2010

கடக்க முடியாத இரவு


அலையெழுப்பிக் கொண்டிருந்த
நதியின் பிரவாகத்தை
கடுங்கோடை இரவொன்றில்
கடக்க வேண்டியிருந்தது
தீவிரத்துடன் எத்தனிக்க
தன்னை மெல்ல உள்ளிழுத்துக்கொண்டது நதி
எவ்வளவு முயன்றும்
வறண்ட நதியின் மணற்சூட்டை மட்டுமே
உணர்ந்த என் விரல்கள் அறிந்திருக்கவில்லை
உயிர்ப்பும் உயிர்ப்பின்மைகள் பற்றியும்.

இருள் விலகாத விடியலில்
துக்கத்தோடு திரும்புகையில்
கேட்க முடிந்த சிரிப்பொலிகள்
நிச்சயம்
வறண்ட நதியினுடையதாக இருக்க முடியாது

2 comments:

  1. எவ்வளவு முயன்றும்
    வறண்ட நதியின் மணற்சூட்டை மட்டுமே
    உணர்ந்த என் விரல்கள் அறிந்திருக்கவில்லை
    உயிர்ப்பும் உயிர்ப்பின்மைகள் பற்றியும்//

    மிக நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
  2. மிக்க நன்றி நேசமித்ரன்.

    ReplyDelete