
செங்காந்தள் நிறமொத்த
அவள் பின்னால்தான்
அவர் சென்றதாக
மாடவீதி மக்கள் பேசிக்கொண்டனர்
அகாலத்தில் அவர்
அவ்வாறு சென்றது
அதிர்ச்சியையேற்படுத்த
மடவிளாகச் சாமியாரை
மண்டியிட்டது
அர்ச்சகர் கூட்டம்
ஊர் என்ன பழிக்குமோ
நாடென்ன பேசுமோவென
அச்சத்தில் இருந்தார்
குரு மகாசன்னிதானம்
திருக்காப்பிட்ட பின்
தேவடியா மகனுக்கு
தெருவில் என்ன வேலையென்று
ஓர் கூட்டம்
கத்திச் சென்றது
(நிச்சயம் தேவடியா மகன் என்றே அவர்கள்
கூறினார்கள்)
கையும் களவுமாக
பிடிப்பட்டவுடன்
குனிந்த தலை நிமிராது
கருவறை நோக்கிச் சென்றார்
எல்லாம் அறிந்த
இராமநாதீஸ்வரர்.
எள்ளும் கொள்ளும் வெடிக்க
ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்
உடனுறையும்
ஞானாம்பிகை
மறு நாளிலிருந்து
மடிமீது
அவளை அமரவைத்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்
அவர்.
அன்றிலிருந்து தான்
அவருக்கு
சுய இன்பப்பழக்கம்
ஏற்பட்டிருக்குமென
குரு மகாசன்னிதானம்
கூறத்தொடங்கினார்.
உடனுறையும்
ஞானம்பிகைக்கு
எந்தக் கேடும்
இப்போது
இல்லை.
நல்லா இருக்கு நண்பா..
ReplyDeleteஇராமனாதீஸ்வரர்? உண்மையான ஏதாவது கோவிலை அடிப்படையாகக் கொண்டு எழுதி இருக்கீங்களா?
அப்படி ஒன்றும் இல்லை பாண்டியன்.இராமனாதீஸ்வரர் என் ஊரில் குடி கொண்டிருக்கும் சிவனின் பெயர் அவ்வளவே.
ReplyDeleteஅருமை தோழர்
ReplyDeleteகவிதை மட்டும் அல்ல கார்த்திகைப் பாண்டியனுக்கான தங்கள் பதிலும்.