Wednesday, September 8, 2010

எதையும் எதிர்கொள்ளத் தயாராயிருப்போம்


ஒரு நல்ல ஆசிரியரைப் போல
கைதேர்ந்த ஓர் வைத்தியரைப் போல
நுட்பமான ஓர் விஞ்ஞானியைப் போல
நடுநிலை தவறாத ஒரு நீதிபதியைப் போல
தன் வேலையை
மிகக் கச்சிதமாகவும்
பச்சாதாபங்களுக்கு அப்பாற்பட்டும்
செய்து முடிக்கின்ற
மரணத்தை
ஏன்
தவறாகப் புரிந்துகொள்கிறோம்.
நாம்?

3 comments:

  1. ஆமாம் ஏன்..? அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இன்று நடிகர் முரளியின் மரணம் பற்றிய பல கட்டுரைகள் வெளிவந்திருந்தன, அவற்றை வாசித்து வரும்போது கண்ட இந்தக் கவிதை நிறையவே அர்த்தமாக தெரிகின்றது

    ReplyDelete
  3. "அதில் நாமும் ஒருவர் என்று அறியாமலேயே...?"
    கடைசி வரி இப்படி இருந்திருக்கலாம்...

    ReplyDelete